top of page

தியானம்

Ayyappa-Meditation.jpg

தியானம் செய்யும் முறை

  1. கைகள் இரண்டையும் ஒன்றாக இணைக்கவும்.. விரல்களை ஒன்றோடொன்று கோர்த்துக் கொள்ளவும்.

  2. இரண்டு கால்களையும் ஒன்றின் மீது ஒன்று வைத்து உட்காரவும்.

  3. இரண்டு கண்களையும் மெதுவாக மூடவும்.

  4. உங்களின் இயற்கையான சுவாசத்தின் மீது முழு கவனத்தையும் செலுத்துங்கள்.

தியானம் நன்றாக அமைவதற்கு சரியான ஆசனம் என்பது மிகவும் முக்கியமானது. இயற்கையான, சௌகரியமான ஆசனத்தில் அமர்வதால் உடலில் எந்த அசௌகரியமும் ஏற்படாது. பலர் தியானத்தை வெறும் தரையில் அமர்ந்து செய்ய நினைக்கிறார்கள். ஆனால் தியானம் செய்வதற்கு நாற்காலி அல்லது சோபாவில் வசதியாக உட்காரலாம். நாம் தேர்ந்தெடுக்கும் ஆசனம் என்பது நமக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தாமல், நமது முழு கவனத்தையும் தியானத்தில் செலுத்துவதற்கு உகந்ததாக இருக்க வேண்டும்.

தியானம் செய்யும்போது என்ன நடக்கும்?

  1. தியானத்தில் இயற்கையான சுவாசத்தின் மீது கவனத்தை செலுத்துவதால் மனம் இயல்பாகவே தெளிவடைந்து, எண்ணங்களற்ற நிலையை அடையும்.

  2. மனமானது எண்ணங்களற்ற நிலையில் இருக்கும் போது, அளவற்ற பிரபஞ்ச சக்தி நமது உடலில் பாய்கிறது.

  3. தொடர்ந்து உள்வாங்கும் பிரபஞ்ச சக்தியின் மூலம் மூன்றாவது கண் திறக்கப்படும், சூட்சுமமான ஞானத்தையும் பெற முடியும்.

  4. இந்த செயலின் மூலம் நாம் மெதுவாக, பிரபஞ்ச சைதன்யத்தின் அனுபவத்தைப் பெறலாம். நமக்கு மேலே உள்ள தெய்வீக சக்தியை அடையாளம் காண முடியும்.

பிரமிட் தியானம்

  1. பிரமிடுக்குள் தியானம் செய்வது மூன்று மடங்கு சக்தி வாய்ந்தது.

  2. பிரமிடுக்குள் அல்லது பிரமிடின் கீழ் செய்யப்படும் தியானம் பிரமிட் தியானம் எனப்படும்.

  3. பிரமிடுக்குள் தியானம் செய்யும் போது பலரும் அமைதியான பேரானந்த நிலையை அனுபவிக்கின்றனர்.

  4. பிரமிடுகள் தியானம் செய்வதில் தொடக்க நிலையில் இருப்பவர்களுக்கு ஆற்றல்மிக்க சூழலை வழங்குவதன் மூலம் அற்புதமான, ஆழமான தியான நிலையை அடைய உதவுகிறது.

  5. பிரமிடுகள் உடல் அழுத்தத்தை குறைக்க உதவுகிறது

 

பிரமிட் தியானத்தை பரிசோதித்த பலர் தங்கள் உடலில் முழுமையான தளர்வை உணர்கிறார்கள். தேவையற்ற, சரியில்லாத எண்ணங்களை முழுமையாக நீக்கி இறுதியாக, பிரபஞ்ச சைதன்யத்தின் நிலையை அடைகின்றனர்.

Visitors Count
bottom of page